டி.வி. கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


டி.வி. கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x

டி.வி. கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குலசேகரம் அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் ரெஸ்பின் ரெனிஸ். இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.15,999 மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களிலேயே டி.வி. வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்து தர கேட்டுள்ளார். அவரும் பழுது பார்த்து தருவதாக கூறினார். ஆனால் சரி செய்து கொடுக்கவில்லை. இதில் தயாரிப்பு பிரச்சினை உள்ளதாலும், வாரண்டி நாட்களுக்கு உட்பட்ட காலத்தில் பழுதடைந்ததாலும் புதிய டி.வி. தர வேண்டும் என ரெஸ்பின் ரெனிஸ் கேட்டுள்ளார். ஆனால் புதிய டி.வி. வழங்கப்படவில்லை. இதனால் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரெஸ்பின் ரெனிஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்து டி.வி. கடையின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு (அபராதம்) வழங்க உத்தரவிட்டனர். மேலும் டி.வி.க்காக ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை ரூ.15,999 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story