வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் விற்பனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் வெளிமாநில மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் நகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
2 பேர் கைது
இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆஸ்பத்திரி தெருவில் வசித்து வரும் குருமூர்த்தி (வயது 39), கழுவந்தோண்டி கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த செல்வமணி (43) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 394 கேரளா லாட்டரி சீட்டுகளையும், ரூ.2 ஆயிரத்து 960- ஐயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.