நாட்டுவெடிகுண்டை வீசி கொன்று விடுவோம் என போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டை வீசி கொன்று விடுவோம் என போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே நாட்டு வெடிகுண்டை வீசி கொன்று விடுவோம் என போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை மிரட்டல்
டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகப்படும் வகையில் பையுடன் 2 பேர் நின்றிருந்தனர்.
போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது அவர்கள் தாங்கள் நாட்டு வெடி குண்டுகள் வைத்திருப்பதாகவும், தங்கள் அருகில் வந்தால் அவற்றை வீசி கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
2 பேர் கைது
எனினும் போலீசார் துரத்தி சென்று 2பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (வயது50), நாராயணன் (58) ஆகியோர் என்பதும், 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டு் வெடிகுண்டு்களை வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டையனையும், நாராயணனையும் கைது செய்தனர்.