2 ஆட்டோக்கள் மோதிவிபத்து


2 ஆட்டோக்கள் மோதிவிபத்து
x

2 ஆட்டோக்கள் மோதிவிபத்து

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் பி.என்.ரோடு புதிய பஸ் நிலையம் அருகே நேற்று பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டன. இதனால் 2 ஆட்டோக்களும் நடுரோட்டில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிச்சம்பாளையம்புதூர் முதல் புதிய பஸ் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நடுரோட்டில் இருந்து 2 ஆட்டோக்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன் பிறகே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.


Related Tags :
Next Story