10 ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி


10 ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலி
x

தனித்தனி விபத்தில் ௧௦ ம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

மாணவர்

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணிகண்டன்(வயது 17). 10-ம் வகுப்பு முடித்துள்ள இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான குமார் மகன் சந்தோஷ்(17), சங்கர் மகன் கார்த்திக்(17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

கலைநல்லூர் அருகே வந்தபோது முன்னால் சென்ற காரை மணிகண்டன் முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் காரின் மீது மோதியதில் நிலை தடுமாறி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த மினி பஸ்சில் மணிகண்டன் உள்பட 3 பேரும் அடிபட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து மணிகண்டனின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்காள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பூ வியாபாரி பலி

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஷேக்பாஷா மகன் அமீர்பாஷா(வயது 54). பூ வியாபாரியான இவர் நேற்று காலை பூ வியாபாரம் செய்துவிட்டு வடசிறுவள்ளூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தேவபாண்டலம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே வந்தபோது கள்ளக்குறிச்சியில் இருந்து வடசிறுவள்ளூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் அமீர்பாஷா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அமீர்பாஷாவின் மகன் தாகீர்பாஷா கொடுத்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த கள்ளக்குறிச்சி, ஏமப்பேரை சேர்ந்த விக்னேஷ்(வயது 27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


Related Tags :
Next Story