டிப்பர் லாரிகள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி


டிப்பர் லாரிகள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி
x

டிப்பர் லாரிகள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி

திருப்பூர்

உடுமலை

உடுமலை அருகே 2 டிப்பர் லாரிகள் நேருக்குநேர் மோதிக்ெகாண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.

இ்ந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிப்பர் லாரிகள் மோதல்

உடுமலை அருகே திண்டுக்கல் - பொள்ளாச்சியை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக டிப்பர் லாரிகள் மூலமாக உடுமலை சுற்றுப்புற பகுதியில் இருந்து மண் கொண்டு வரப்படுகிறது. இந்தப் பணியில் 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் அமராவதி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு டிப்பர்லாரி ஒன்று மண் ஏற்றிக்கொண்டு உடுமலை- அமராவதி சாலை வழியாக உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்பகதூர் மகன் திலீப் என்கிற ராம்கிஷோர் (வயது 29) ஓட்டினார். இந்த லாரி மானுப்பட்டி அருகே வந்தபோது எதிரே உடுமலையில் மண்ணை கொட்டி விட்டு மற்றொரு லாரி வந்தது. இந்த 2 லாரிகளும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் டிரைவர் ராம்கிஷோர் பலத்த காயம் அடைந்தார்.

சாவு

உடனே ராம் கிஷோரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு முதல் உதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்கிஷோர் பலியானார். இந்த விபத்து குறித்து அமராவதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



Next Story