மடத்துக்குளம் அருகே கோழிப்பண்ணை கண்காணிப்பாளரிடம் கத்தியைக் காட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் அருகே கோழிப்பண்ணை கண்காணிப்பாளரிடம் கத்தியைக் காட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே கோழிப்பண்ணை கண்காணிப்பாளரிடம் கத்தியைக் காட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக். இவர் மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி பகுதியில் தனியார் கோழிப்பண்ணையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அதே பண்ணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லக்ஸ்மன் மாஜி என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் துங்காவி-உடுமலை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கார்த்திக்கை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்து தப்பி ஓட முயன்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உதவியுடன் அவர்களின் ஒருவரை பிடித்து கணியூர் போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காரத்தொழுவு பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகன் விக்ரம் (19) என்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து விக்ரத்தை போலீசாா் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் ஜீவா (20) என்பதும் தெரியவந்தது.சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ஜீவாவை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.