2 டன் முருங்கைக்காய் கொள்முதல்
2 டன் முருங்கைக்காய் கொள்முதல்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.70 முதல் 80 வரைக்கும், மரம் முருங்கை ரூ.65முதல் ரூ.70 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.75முதல் ரூ.80 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் ஒரு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது, என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.