ரெயில் மறியல் போராட்டத்தை விளக்கி இருசக்கர வாகன பிரசாரம்


ரெயில் மறியல் போராட்டத்தை விளக்கி  இருசக்கர வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ரெயில் மறியல் போராட்டத்தை விளக்கி இருசக்கர வாகன பிரசாரம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்தது

திருவாரூர்


மத்திய அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரசாரம் நடந்தது.

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறியல் போராட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ஒன்றியம் புதூர் கடைவீதியில் இருந்து இருசக்கர வாகன பிரசார பயணத்தை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜ.வி.நாகராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


Next Story