ஊழியர்கள் 2 பேர் தற்காலிக பணிநீக்கம்


ஊழியர்கள் 2 பேர் தற்காலிக பணிநீக்கம்
x

நெல் கொள்முதலில் குறைபாடு காரணமாக ஊழியர்கள் 2 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டா் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

திருவாரூர்

திருவாரூர்;

நெல் கொள்முதலில் குறைபாடு காரணமாக ஊழியர்கள் 2 பேரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டா் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்பு கடந்த 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று முன்தினம் கொரடாச்சேரி அருகே ஊர்குடி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.

தற்காலிக பணிநீக்கம்

அப்போது நெல் கொள்முதல் பணிகளில் குறைபாடுகள் இருப்பது அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கொள்முதல் பணிகளில் ஈரப்பதம் உள்ளிட்ட எந்தவித குறைபாடுகள் இன்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டு்ம் என ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டார்.இந்த நிலையில் கொரடாச்சேரி ஊர்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணிகளில் குறைபாடு கண்டறியப்பட்டதால் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பழனி, உதவியாளர் செல்வகுமார் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.


Next Story