உடன்குடி சீர்காட்சி பத்திரகாளிஅம்மன் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு


உடன்குடி சீர்காட்சி   பத்திரகாளிஅம்மன் கோவிலில்  ஆடி அமாவாசை வழிபாடு
x
தினத்தந்தி 28 July 2022 3:29 PM IST (Updated: 28 July 2022 6:17 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி சீர்காட்சி பத்திரகாளிஅம்மன் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள சீர்காட்சி பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் நாடு நலம் பெற வேண்டியும், வறுமை ஒழிந்து செழுமை வேண்டியும் பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். நண்பகல் 12 மணி அளவில் பத்ரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்புஅபிஷேகம், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story