உடன்குடி கருப்பட்டி விலை கிடு கிடு உயர்வு


உடன்குடி கருப்பட்டி விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி கருப்பட்டி விலை கிடு கிடுவென விலை உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் கருப்பட்டி விலை கிடுகிடு என உயர்ந்தி விற்கப்படுகிறது ஒரு கிலோ புதிய கருப்பட்டி ரூ.280-க்கும், பழைய கருப்பட்டி ரூ.340-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடன்குடி கருப்பட்டி

உடன்குடி கருப்பட்டி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நகரமாகும். இப்பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு கிராக்கி உண்டு. இங்கிருந்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் கருப்பட்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்தசில மாதங்களாக சீசன் இருந்ததால், உடன்குடி கருப்பட்டி

ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மூலப்பொருளான பதநீர் உற்பத்தி சீசனும் முடியும் காலமாக இருப்பதால், கருப்பட்டி உற்பத்தி தயாரிப்பும் குறைந்து வருகிறது.

கிடுகிடு விலை உயர்வு

இதனால் கடந்த சில நாட்களாக கருப்பட்டி விலை கிடுகிடுவென உயர்த்தி விற்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்கும் என்றும், அதற்கு பின்பு புதிய கருப்பட்டி உற்பத்தி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதனால் பழைய கருப்பட்டி தான் விற்பனைக்கு வரும் என்ற சூழல் இருப்பதால், இப்போதே விலை அதிகரித்துள்ளது. தற்போது உடன்குடியில் இருந்து கருப்பட்டி வெளியூர்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஒரு கிலோ எடையுள்ள புதிய கருப்பட்டி ரூ.280-க்கும். ஓராண்டுக்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்டபழைய கருப்பட்டி ஒருகிலோ ரு.340-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு சீசன் தொடங்கும் வரை கருப்பட்டி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story