உடன்குடி புனித வளன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
உடன்குடி புனித வளன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் முகாம் நடந்தது. மாதவன்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சேர்மத்துரை தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கருப்பசாமி, வார்டு உறுப்பினர் சுடலைவடிவு, பள்ளி(பொறுப்பு) தலைமை ஆசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தூய்மைப்பணி, மரம் நடுதல், கால்நடை மருத்துவ முகாம் ஆகியவற்றை மேற்கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் டேனியல் செய்திருந்தார்.
Related Tags :
Next Story