தாடாளன் பெருமாள் கோவிலில் உதய தங்க கருட சேவை
சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் உதய தங்க கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் உதய தங்க கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பவித்தர உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காழி ஸ்ரீ ராம விண்ணகரம், ஸ்ரீ திருவிக்ரம பெருமாள் என அழைக்கப்படும் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28-வது கோவிலாக இத்தலம் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
தங்க கருட சேவை
5-ம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உதய கருட சேவை மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் ஆதீனம் கே.கே.சி.ஸ்ரீனிவாசாச்சாரியார் செய்திருந்தார்.