உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி மெரினா கடற்கரையில் படகுப்போட்டி நடைபெற்றது.
சென்னை,
தி.மு.க. இளைஞரணி செயலாளரான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.
1 மாதம் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் 4 பேர் வீதம் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடலில் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் திரும்பும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story