உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்
உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிைல வகித்தார். செயல் அலுவலர் ரேவதி வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் ஆ.பூசாராணி கூறினார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஆர்.சரவணன், ஜெ.கீதா, வி.ஆர்.சரவணன், ஏ.ரமேஷ், ஆர்.மகேஸ்வரி, எம்.பரிமளா, பி.சந்தியா உள்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story