பி.ஏ.பி.2-ம் மண்டல பாசனத்திற்கு 28-ந்தேதி தண்ணீர் திறக்க திட்டம்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.2-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதையொட்டி கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பி.ஏ.பி.பாசனம்
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) பாசனத்திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பாசன பகுதிகளுக்கான தண்ணீர் தொகுப்பு அணைகளில் இருந்து காண்ட்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக பாசனபகுதிகளுக்கு திறந்து விடப்படுகிறது.
முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது பிரதான கால்வாய்கள் மற்றும் கிளை (பகிர்மான) கால்வாய் கரைகளில் செடிகள் வளர்ந்துள்ளன. கால்வாயின் உள்பகுதியிலும் செடிகள் வளர்ந்துள்ளன.
சுத்தம் செய்யும் பணிகள்பி.ஏ.பி.2-ம் மண்டல பாசனத்திற்கு
28-ந்தேதி தண்ணீர் திறக்க திட்டம்
இந்த நிலையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 28-ந்தேதி தண்ணீர் திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது உடுமலை கால்வாய் பிரிவு1-ல் திருமூர்த்தி அணையில் இருந்து தளி ஜல்லிபட்டி, பள்ளபாளையம்,
எஸ்.வி.புரம் வழியாக 23 கி.மீ.தூரத்தில் உள்ள தாந்தோணி வரை கால்வாய் கரையின் 2 பக்கங்களிலும் வளர்ந்துள்ள செடிகள் மற்றும் கால்வாயின் உள்புறம் வளர்ந்துள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.
அத்துடன் உடுமலை கால்வாயில் இருந்து 2-ம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் கிளை (பகிர்மான கால்வாய்) கால்வாய்கள் மற்றும் கரைப்பகுதிகளில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஜல்லிபட்டியில் உடுமலை (பிரதான) கால்வாய், சின்னவீரன்பட்டி, எஸ்.வி.புரம் ஆகிய பகுதிகளில் கிளை கால்வாய் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.