குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு


குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால்   சுகாதார சீர்கேடு
x
திருப்பூர்


உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை தினசரி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த காய்கறிகள், வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கமிஷன் மண்டிகளில் ஏலம் விடப்படும். ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு காய்கறிகளை வாங்கி செல்வார்கள். தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஏலம் போகாத தக்காளிபழங்கள், விற்பனையாகாமல் கழிக்கப்பட்ட காய்கறிகள் ஆகியவை கமிஷன் மண்டிகள் உள்ள பகுதியிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. அவை அங்கு குவிந்து கிடக்கிறது.

மழையினால் தக்காளி பழங்கள் மற்றும்காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் கெட்டு நோய்பரவக்கூடிய நிலை உள்ளது. அதனால் அங்கு குவிந்துகிடக்கும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story