போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு   விழிப்புணர்வு ஊர்வலம்
x
திருப்பூர்


தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள்ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் காவல் துறை,போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றின் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை விதிகளை பின்பற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

 ஊர்வலம் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்டது.ஊர்வலத்தை உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் உடுமலை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல்கள் சங்கத்தலைவர் கே.ஸ்ரீதர், அரசு வக்கீல்கள் எம்.சேதுராமன், சி.ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் கண்ணன் மற்றும் வக்கீல்கள், போலீசார், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். ஊர்வலம் நகர முக்கிய வீதிகள் வழியாக மத்திய பஸ்நிலையம் முன்பு சென்றடைந்தது.

 ஊர்வலத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரி, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச்சேர்ந்த என்.சி.சி. மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் போதைப்பொருள் ஒழிப்போம், லஞ்சம் ஒழிப்போம், சாலை விதிகளை பின்பற்றுவோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.அத்துடன் இதுகுறித்துகோஷங்களையும் முழங்கி சென்றனர்.


Next Story