மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
தளி
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 31-ந் தேதி ெதாடங்குகிறது.
உடுமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கலந்தாய்வு
2023 - 2024 ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வருகின்ற 31-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாள் 31-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், ஏ, சான்றிதழ் பெற்ற தேசிய மாணவர் படை உறுப்பினர், அந்தமான் நிகோபர் பகுதி தமிழ் வம்சாவழியினர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்புப்படை வீரர்களின் குழந்தைகள் மற்றும் துணைவியார், மாவட்ட, மாநில, தேசிய, அகில உலக அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின்கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான பி.பி.ஏ. (60), பிகாம் (சுழற்சி I - 60), பிகாம் (சுழற்சி II - 60), பிகாம் சிஏ (சுழற்சி I - 60), பிகாம் சிஏ (சுழற்சி II -60), இ-காமர்ஸ் (60), பொருளியல் (50) அரசியல் அறிவியல் (50) ] கலந்தாய்வு நடைபெறும்.
5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான இயற்பியல் (48), வேதியியல் (48), தாவரவியல் (20), கணிதவியல் (48), கணினி அறிவியல் (சுழற்சி I - 50), கணினி அறிவியல் (சுழற்சி II - 30) புள்ளியியல் (40) கலந்தாய்வு நடைபெறும்.
6-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்த மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்த மாணவர்களுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது.
சான்றிதழ்கள்
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் மூன்று நகல்கள், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மூன்று நகல்கள் அசல் மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சாதிச்சான்றிதழ் தலா மூன்று நகல்கள், பாஸ்போர்ட் அளவு 6 புகைப்படம், www.tngasa.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல், கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் ஒருபக்க தரவரிசை விவரத்தின் நகல் கொண்டு வரவேண்டும். மேலும் உரிய கல்விக்கட்டணம், சிறப்புப்பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்கள் அதற்கான உரிய அசல் சான்றிதழ்கள் மூன்று நகல்கள் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தர வேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியை பார்வையிடலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.