கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
திருப்பூர்


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022 -23-ம் ஆண்டிற்கானகால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ந்தேதி முதல் உடுமலை, மடத்துக்குளம்,குடிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில், ஒவ்வொரு கிராமமாக நடந்து வருகிறது.அதன்படி உடுமலை ஒன்றியம் கண்ணமநாய்க்கனூர் ஊராட்சிக்குட்பட்ட காளியாபுரம் கிராமத்தில் முகாம் நடைபெற்றது. முகாமை கண்ணமநாய்க்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பம்மாள் கருப்பசாமி தொடங்கி வைத்தார்.

முகாமில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மலையாண்டிகவுண்டனூர் கால்நடை உதவி மருத்துவர் ச.ராஜசொக்கப்பன் தலைமையிலான மருத்துவக்குழுவின் மூலம், முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், கருவூட்டல், சினை பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் ராமசாமி கலந்து கொண்டுகால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி குறித்து பேசினார். மேலும் சிறந்த 3 கன்றுகளுக்கான பரிசுகளையும், சிறந்த கறவை பசுக்களுக்கான மேலாண்மை சான்றிதழ்களையும் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். முகாமில் கண்ணமநாய்க்கனூர் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்துகொண்டனர். முகாமில் மொத்தம் 1,014 கால்நடைகள் பயனடைந்தன. மேலும் இந்த முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப உத்திகள், கால்நடைகளைத்தாக்கும் நோய்களுக்கான மூலிகை மருத்துவம் குறித்து விளக்கப்பட்டதுடன் நோய்க்குறியியல் தொடர்பானகண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.


Next Story