முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்க்கை


முதல் நாளில் 296 மாணவர்கள் சேர்க்கை
x
திருப்பூர்


உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் 296 மாணவர்கள் சேர்ந்தனர்.

அரசு கலைக்கல்லூரி

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில்2022-2023-ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் (மாற்றுத்திறனாளிகள், தேசியமாணவர் படை, விளையாட்டுத்துறை) 18 மாணவர்கள் சேர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ, மாணவிகள்சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று

நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் 19மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 11 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில ்9மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 35 மாணவர்களும், அரசியல்அறிவியல்பாடப்பிரிவில் 20 மாணவர்களும்,

புள்ளியியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், பொருளியல் பாடப்பிரிவில் 18 மாணவர்களும், பி.காம் பாடப்பிரிவில் 48 மாணவர்களும், பி.காம் (சி.ஏ) பாடப்பிரிவில் 72 மாணவர்களும், பி.காம் (இ.காம்) பாடப்பிரிவில் 25 மாணவர்களும், பி.பி.ஏ. பாடப்பிரிவில் 22 மாணவர்களும் என மொத்தம் 296 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி சான்றை அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி வழங்கினார். முதல் கட்ட கலந்தாய்வின் 3-வதுநாளான இன்று ( வியாழக்கிழமை), தரவரிசை எண் 1,001 முதல்1,800 வரையிலான மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சான்றிதழ்கள்

கலந்தாய்வில் பங்கு பெற வருகைதரும் மாணவர்கள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்- 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள், அசல் மாற்றுச்சான்றி மற்றும் 2 நகல்கள், அசல் சாதிச்சான்றிதழ் மற்றும்2 நகல்கள், அசல் ஆதார் அட்டை மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-6 இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லூரி இணையதளப் பக்கத்தின் நகல் ஆகிய சான்றிதழ்களுடன் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி தெரிவித்துள்ளார்.


Next Story