நீதிமன்ற வளாகம் தூய்மை பெறுமா?


நீதிமன்ற வளாகம் தூய்மை பெறுமா?
x
திருப்பூர்


உடுமலையில் உள்ள சார்பு நீதிமன்ற கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் புதர் மண்டி காணப்படுகிறது.

பராமரிப்பு இல்லை

உடுமலையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. இதில் நீதிமன்ற கட்டிடங்கள் சரியான பராமரிப்பின்றி காணப்படுவதால் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் சிலாப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது.

கான்கிரீட்டுகள் உடைந்து போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. மேலும் ஜன்னல் சிலாப்பில் இருந்து சிமெண்டு காரைகள் அவ்வப்போது கீழே விழுந்த வண்ணம் உள்ளது. இதேபோன்று கட்டிடத்தின் சில பகுதிகள் ஆங்காங்கே வலுவிழந்து காணப்படுகிறது.

செடி, கொடிகள்

கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன.

இவ்வாறு புதர் மண்டி காணப்படுவதால் இங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மேலும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஜன்னல் வரைக்கும் கொடிகள் படர்ந்து இருப்பதால் விஷ பூச்சிகள் கட்டிடத்தின் உள்ளே செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும், புதர் மண்டிய பகுதிகளை சுத்தம் செய்து முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story