உடுமலை திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை
திருப்பூர்
உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே உள்ள செங்குளத்தின் கரைப்பகுதியில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவிலில் தீபாவளியையொட்டி, வேங்கடேச பெருமாள் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலையில் வேங்கடேச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாககலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர ்வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story