சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி


சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி
x
திருப்பூர்

உடுமலை,

உடுமலை அருகே உள்ள எஸ்.வி.புரத்தைச்சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார், குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி உடுமலை தளி சாலையில் உள்ள முதல்கிளை நூலகமான மாதிரி நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் சாதனையாளர் (எஸ். சந்தோஷ்குமார்) சந்திப்பு நிகழ்ச்சி, நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்டத்தலைவர் க.லெனின்பாரதி தலைமை தாங்கி பேசினார்.

 நூலகர் அ.பீர்பாஷா வரவேற்று பேசினார். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் எம்.தண்டபாணி, பி.வேலாயுதம், வி.கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.விஜயகுமார், கு.கண்ணபிரான், ஆர்.எஸ்.மணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு, நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர், போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் தேர்வர்களின் கேள்விகளுக்கு எஸ்.சந்தோஷ்குமார் விளக்கமளித்து பேசினார். முடிவில் நூலக வாசகர் வட்ட பொருளாளர்எஸ்.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.


Next Story