உடுமலை ெரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வந்தாச்சு...
உடுமலை ெரயில் நிலையத்தில் ெரயில் வரும் நேரத்தில் டிக்கெட் கவுண்டரில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ெரயில் பயணம்
பொதுப் போக்குவரத்து சாதனங்களில் அதிகமான மக்களின் விருப்பத் தேர்வாக ெரயில் பயணம் உள்ளது. பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் ெரயில் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதாலும், அலுப்பில்லாத பயணம் என்ற வகையிலும் பலரும் ெரயில்பயணத்தை விரும்பி மேற்கொள்கின்றனர். தற்போது உடுமலை ெரயில் நிலையத்தை அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் ஒரு டிக்கட் கவுண்டர் மட்டுமே உள்ளதால். முன் பதிவில்லாத பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் ெரயில் வரும் நேரம் நெருங்கும்போது தவிப்புடன் வரிசையில் காத்திருப்பதும் சில வேளைகளில் ரெயிலை தவற விடும் சூழலும் உருவாகிறது. எனவே உடுமலை ெரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கட் கவுண்டர் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தானியங்கி எஉடுமலை ெரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வந்தாச்சு...ந்திரம்
இந்தநிலையில் உடுமலை ெரயில் நிலையத்தில் நிறுவுவதற்காக தானியங்கி டிக்கட் வழங்கும் எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரத்தில் புறப்படும் இடம், சென்று சேரும் இடம் மற்றும் ெரயில் வகை உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து, 'கியூ ஆர் கோடு' ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதனால் பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்த்து தாங்களாகவே விரைவில் டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்.
பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான ெரயில்களுக்கும் முன் பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த எந்திரம் மூலம் பெற முடியும். இந்த எந்திரம் நிறுவும் பணிகள் நிறைவடைந்ததும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.