உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம்


உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம்
x
திருப்பூர்

உடுமலை:

உடுமலை உழவர் சந்தையில் கடந்த மே மாதம் ரூ.1 கோடியே 59 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

ரூ.1½ கோடிக்கு விற்பனை

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத்துறையின் சார்பில் உடுமலை கபூர்கான் வீதியில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் (மே) 1,863 விவசாயிகள் மொத்தம் 5 லட்சத்து 96 ஆயிரத்து 745 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 43 ஆயிரத்து 405-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 66 ஆயிரத்து 766 பேர் வாங்கி பயனடைந்தனர்.

வரத்து அதிகரித்தது

கடந்த ஏப்ரல் மாதத்துடன், மே மாதத்தை ஒப்பிடும்போது உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் எண்ணிக்கை 143 பேர் அதிகமாக இருந்த நிலையில், காய்கறிகள் வரத்தும் 26 ஆயிரத்து 35 கிலோ அதிகமாக இருந்தது.

அதனால் காய்கறிகளின் மொத்த விற்பனை தொகையும் ரூ.20 லட்சத்து 24 ஆயிரத்து 925 கூடுதலாக இருந்தது. காய்கறிகளை வாங்குவதற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தை விட மே மாதம் 2 ஆயிரத்து 847 பேர் அதிகமாக இருந்தது.

காய்கறிகள் விலை

உடுமலை உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.35-க்கும், தக்காளி (நாட்டு ரகம்) ரூ.55-க் கும், தக்காளி (ஆப்பிள் ரகம்) ரூ.62-க்கும், அவரைக்காய் ரூ.70 -க்கும்,புடலங்காய் ரூ.32-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும்,சுரைக்காய் ரூ.18-க்கும்,பாகற்காய் ரூ.55-க்கும், கொத்தவரை ரூ.34-க்கும், பூசணிக்காய் ரூ.14-க்கும், அரசாணிக்காய் ரூ.15-க்கும், பச்சை மிளகாய் ரூ.28-க்கும், சின்னவெங்காயம் ரூ.30-க்கும், பொறியல் தட்டை ரூ.20-க்கும், முருங்கைக்காய் ரூ.80-க்கும், சேனைக்கிழங்கு ரூ.35-க்கும், கருணைக்கிழங்கு ரூ.40-க்கும் உருளைக்கிழங்கு ரூ.42-க்கும் காரட் ரூ.52-க் கும், பீட்ரூட் ரூ.20-க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.52-க்கும், முட்டைக்கோஸ் ரூ.38-க்கும், காளிபிளவர் ரூ.20-க்கும், முள்ளங்கி ரூ.22-க் கும், இஞ்சி ரூ.50-க்கும் விற்கப்பட்டது.

புஷ்பீன்ஸ் ரூ.82-க்கும், மேரக்காய் ரூ.30-க் கும், வாழைக்காய் ரூ.35-க்கும், கொய்யாப்பழம் ரூ.65-க்கும், எலுமிச்சம்பழம் ரூ.100-க்கும், பப்பாளி ரூ.18-க்கும், வெள்ளரிக்காய் ரூ.60-க்கும், பிளம்ஸ் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story