பூத் தலைவர்களுக்கு பாராட்டு விழா
பா.ஜ.க மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்கவும் மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிவுறுத்தலின்படியும் திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் கே.கோபாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படியும் உடுமலை நகர பா.ஜ.க. சார்பில் 58 பூத் தலைவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கட்சியை பலப்படுத்தும் வகையிலும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்யும் வகையில் பணியாற்றி வருகின்ற உடுமலை நகர மண்டலத்தில் உள்ள 58 பூத் தலைவர்களுக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவிற்கு உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து பூத் தலைவர்களுக்கு கட்சி கொடி மற்றும் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. மேலும் மனதின் குரல் 100- வது நிகழ்ச்சி வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருந்த பூத் தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், துணைத்தலைவர் குப்புசாமி, சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் நகர துணைத்தலைவர் உமா குப்புசாமி, பொதுச் செயலாளர்கள் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளர்கள் ஐ.டி.பிரிவு மாவட்ட செயலாளர் சந்துரு, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் சம்பத், பங்காரு, கிரிராஜன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.