உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
வடசருக்கை கிராமத்தில் உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.
தஞ்சாவூர்
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை கிராமத்தில் சித்தி விநாயகர், உஜ்ஜைனி மகா காளியம்மன், பாவாயி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜையும், 9-ந்தேதி மகா சாந்தி ஹோமம், நித்திய படி பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை கடங்கள் புறப்பாடு நடந்து விநாயகர், உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. அப்போது கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வடசருக்கை கிராமமக்கள் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story