உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் சித்திரை சகோபுர திருவிழா


உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் சித்திரை சகோபுர திருவிழா
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் சித்திரை சகோபுர திருவிழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் சித்திரை சகோபுர திருவிழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.

உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருத்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய உக்தவேதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. . இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கடந்த 24-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று 5-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் சப்பரம் எனப்படும் சகோபுர திருவிழா நடந்தது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வெள்ளிரத ரிஷப வாகனத்தில் சுவாமி மற்றும் அம்பாள் சகோபுரத்திற்கு எழுந்தருளினர்.

சகோபுர திருவிழா

பின்னர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சகோபுர திருவிழா நடந்தது.பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வாணவேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வீடுகள் தோறும் ஆராதனை செய்யப்பட்டு நிலையை அடைந்தது.

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story