50 சதவீத மானியத்தில் உளுந்து ரகங்கள்
வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் உளுந்து ரகங்கள் மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் தகவல்
மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆடி, மாசி ஆகியவை உளுந்து சாகுபடிக்கு ஏற்ற பருவகாலங்கள் ஆகும். வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் உளுந்து பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல வடிகால் வசதி கொண்ட வளமான மண் உளுந்து சாகுபடிக்கு ஏற்றது. அதேபோல் உளுந்து எல்லா வகை மண்ணிலும் சாகுபடி செய்தாலும் வண்டல் மண், உளுந்து சாகுபடிக்கு மிகவும் சிறந்தது. டிஎம்வி 1, டி 9 மற்றும் கோ 9 ஆகிய ரகங்கள் உளுந்து சாகுபடிக்கு மிகவும் ஏற்ற ரகங்கள் ஆகும். டெல்டா பகுதிகளின் நெல் தரிசுக்கு ஏற்ற ஆடுதுறை- 3 ஆதார விதை ரகங்கள் மயிலாடுதுறை, மணல்மேடு, காளி, வில்லியநல்லூர் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தேவையான அளவு பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.