உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா: வெள்ளிக்கிழமை தொடங்குகிறது


உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா: வெள்ளிக்கிழமை தொடங்குகிறது
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் அருகே உள்ள உமரிக்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் 3 நாட்களுக்கு இரவு 7.30 மணிக்கு அம்பாள் தீப ஆராதனை நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடைவிழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் அபிஷேகத்துக்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று மேளதாளங்களுடன், குதிரைப்படை முன் செல்ல புண்ணிய தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்படும். காலை 7 மணிக்கு அம்பாள் தீப ஆராதனை, மாலை 5.30 மணிக்கு அம்பாள் அபிஷேகத்துக்கு பொருனை நதியிலிருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்படும். இரவு 7.30 மணிக்கு அம்பாள் தீபாராதனை, இரவு 8 மணிக்கு வில்லிசை, நாதஸ்வரம், இரவு 9 மணிக்கு கரகாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் அலங்கார தீபாரதனை, 12.30 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், அதிகாலை 1 மணிக்கு பார் விளையாட்டை தொடர்ந்து மாவிளக்கு, கயிறு சுற்றி ஆறுதல், ஆயிரம் கண் பானை, முளைப்பாரி எடுத்தல், நேர்த்திக்கடன் ெசலுத்துதல் நடைபெறும். அதிகாலை 2.30 மணிக்கு யானை மற்றும் குதிரைப் படை முன் செல்ல அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி நகர்வலம் வருதல், அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெறுகிறது. வருகிற 30-ந் தேதி காலை 9.30 மணிக்கு மஞ்சள் பால் பொங்கலிடுதல், காலை 10 மணிக்கு ஊர் மக்கள் முத்தாரம்மனுக்கு பொங்கலிடுதல் நடைபெறுகிறது. கொடை விழா ஏற்பாடுகளை உமரிக்காடு கிராம விவசாய சங்க தலைவர் கார்த்தீசன் நாடார் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் சாந்தசுரேஷ் நாடார், மணிகண்டன் நாடார், பிரபாகர் நாடார், கோட்டாளம் நாடார், கணக்கர் ரமணிதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story