உம்பளச்சேரி-பிராந்தியங்கரை சாலையை சீரமைக்க வேண்டும்


உம்பளச்சேரி-பிராந்தியங்கரை சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உம்பளச்சேரி-பிராந்தியங்கரை சாலையை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் இருந்து வேதாரண்யம் ஒன்றியம் பிராந்தியங்கரை வரை உள்ள தார் சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து கை, கால்களில் பலத்த காயமுடன் ஆஸ்பத்திரி சென்று உள்ளனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி, துளசாபுரம் பகுதிகளில் இருந்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்றுவர இந்த சாலையை தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உம்பளச்சேரியில் இருந்து பிராந்தியங்கரை வரை செல்லும் சாலை இரண்டு ஒன்றியங்களையும் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. மேலும் கரியாப்பட்டினம், வாய்மேடு, தாணிக்கோட்டகம் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கும் இந்த சாலையைத்தான் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாதை இல்லை என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மேற்கண்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story