வளா்ச்சிப்பணிகளை செய்ய முடியவில்லை
போதிய அளவு நிதி ஒதுக்காததால் வளா்ச்சிப்பணிகளை செய்ய முடியவில்லை என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
போதிய அளவு நிதி ஒதுக்காததால் வளா்ச்சிப்பணிகளை செய்ய முடியவில்லை என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் சூரியமூர்த்தி, சாந்தி, மேலாளர் மோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
பணிகள் நடக்கவில்லை
ஞானமோகன்:- சாலை பணிகள் டெண்டர் விட்டு நீண்ட நாட்கள் ஆகியும் நடைபெறாமல் உள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.
வேதரத்தினம்:- சேவியக்காடு சுடுகாடு சாலை அமைக்க வேண்டும். ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்காததால் பணிகள் நடைபெறவில்லை. பணம் வழங்கி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
பத்மா:- ஆட்டுர், எழிலூர் சாலையை சரி செய்ய வேண்டும்.
பிரேமா:- ராய நல்லூர் பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும். இருந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் விரைந்து கட்டி தர வேண்டும்.
போதிய நிதி ஒதுக்கவில்லை
பக்கிரிஅம்மாள:- கச்சனம் கடைத்தெருவில் பஸ் நிலையம் அமைக்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து பேசிய ஒன்றியக்குழுதலைவர் பாஸ்கர் கூறியதாவது:- ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடத்தும் பொழுது அதில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் மன வேதனை அடைகிறேன். காரணம் அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.
கலெக்டாிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலருக்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி அவர்கள் பகுதியில் உள்ள பணிகள் மேற்கொள்ள ஆவண செய்யுமாறு கோரிக்கை மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ரூ.11 கோடி ஒதுக்கீடு
மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழக முதல்- அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும், நிதி வராததால் ஒன்றியத்தில் உள்ள பாலம் கட்டும் பணிகள் எல்லாம் நடைபெறாமல் காலதாமதமாக உள்ளதாக கூறினார். தமிழக முதல் - அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 கோடி நிதி வழங்கி சாலை பணிகளை நடைபெற ஆவன செய்த முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.