பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்: ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்யலாம்


பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்:  ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 40 சங்கங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்துக்கு 50 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கத்துக்கும் தேவையான பதிவேடு புத்தகங்கள், பரிசோதனை உபகரணம், கேன்கள் வாங்கவும், கடை வாடகை செலுத்துவதற்கும் தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆதிதிராவிடர் மகளிர் கூட்டமைப்புக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மகளிர் தேனி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க, மாவட்ட கூட்டுறவு செயலாளர் மற்றும் ஆவின் நிறுவன அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் பெற்று வழங்கப்படும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் ஏற்கனவே மானியம் பெற்றிருக்கக் கூடாது. இந்த திட்டத்தில் பயன்பெற ஆர்வம் உள்ளவர்கள் https://application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.


Next Story