இளநிலை மாணவர்கள் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு
முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை மாணவர்கள் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு 7-ந் தேதி தொடங்குகிறது.
வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.
984 காலியிடங்களுக்கு 16,010 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 29 முதல் வருகிற 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 8-ந் தேதி வேதியியல், விலங்கியல், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும்,
9-ந் தேதி வணிகவியல், வணிக மேலாண்மையியல், வரலாறு, பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும்,
10-ந் தேதி தமிழ், ஆங்கிலம் மொழி பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.