வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 10-ம் வகுப்பு மற்றும் அதற்குகீழ் படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேர்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான மற்றும் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்ககூடாது.

சுயஉறுதி ஆவணம்

உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 28.2.2023 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று 10 ஆண்டுகாலம் நிறைவு பெறாமல் 2022-23-ம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதவர்கள் 28.2.2023-க்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவிகத்துள்ளார்.


Next Story