ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நல கூட்டமைப்பினர் தர்ணா


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நல கூட்டமைப்பினர் தர்ணா
x

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நல கூட்டமைப்பினர் தர்ணா

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர், கோவை மாவட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலக்கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் அறப்போராட்டம் என்ற பெயரில் நேற்று காலை தர்ணா நடைபெற்றது. போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சிதா பிரியா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட பொறுப்பாளர் மெய்கண்ட தேவன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித்தேர்வு என்ற அரசாணை 149-ஐ நீக்கம் செய்ய வேண்டும். தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த எங்களை நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் பணி நியமனம் செய்வதில் பழையபடி வயது வரம்பு தளர்த்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனனர் என்றும், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


Next Story