குரும்பலூர் பிரிவு மின் அலுவலக பகுதிகளில் திடீர் ஆய்வு
குரும்பலூர் பிரிவு மின் அலுவலக பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பிரிவு மின் அலுவலகத்திற்குட்பட்ட குரும்பலூர், பாளையம், மேலப்புலியூர், ஈச்சம்பட்டி, திருப்பெயர், நாவலூர், புது ஆத்தூர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமையில் 33 குழுக்களாக பிரிந்து மின் இணைப்பில் திடீர் ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதில் முறைகேடாக பயன்படுத்திய மின் இணைப்புகள் மற்றும் பழுதான மின் மீட்டர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் அவ்வப்போது நடைபெறும். மேலும் மின் நுகர்வோர் மின் இணைப்புகளை எந்த காரணத்திற்காக வாங்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்துமாறு செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story