திட்டக்குடிநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைஅமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
திட்டக்குடி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் சீருடை வழங்கினார்.
திட்டக்குடி,
திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு நகரமன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஆண்டவர், துணைத் தலைவர் பரமகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு நகராட்சி பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். மேலும் அவர், நகராட்சி சார்பில் ரூ.36 லட்சத்தில் வாங்கப்பட்ட பொக்லைன் எந்திரத்தை துப்புரவு பணி பயன்பாட்டுக்காக இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சி.வெ.கணேசன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.