துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை


துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை
x

பெரணமல்லூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடையை பேரூராட்சி தலைவர் வழங்கினார்

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

பெரணமல்லூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செயல் அலுவலர் தமிழரசி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை கலந்து கொண்டு 34 துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கி பேசினார்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் பெரியநாயகம் நன்றி கூறினார்,


Next Story