கோடை கால பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சீருடை
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அடுத்த காந்திபுரம் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை கால கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு கைப்பந்து குழுவின் ஆலோசகர் வக்கீல் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கைப்பந்து குழு தலைவர் சம்பத், செயலாளர் குமார், பொருளாளர் நலதம்பி, பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் குமார் வரவேற்று பேசினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் மாதேஷ், முன்னாள் இந்திய கைப்பந்து குழு கேப்டன் ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு டி-ஷர்ட் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதில் மாணவர்கள், கைப்பந்து சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.