மாநில விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு சீருடை


மாநில விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு சீருடை
x

மாநில விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட அளவில் நடந்த கைப்பந்து, கோ-கோ, டென்னிஸ், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியின் 45 மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சா.இளங்கோ தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சி.ரவிவர்மன், உதவித்தலைமை ஆசிரியர்கள் வேல்முருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி சாமண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் இளங்கோ, உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், பழனி, ஆசிரியர்கள் பெருமாள், விஜயகுமார், சிவசங்கர், மதன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story