சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்


சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்

நீலகிரி

ஊட்டி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க நீலகிரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணபாண்டியன் வரவேற்றார். மாநிலத்துணைத் தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் இளங்கோவன், சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு உரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி மற்றும் சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story