மலைக்கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம்:கடம்பூர், ஆசனூரில் 2 புதிய துணை மின்நிலையங்கள்தமிழக அரசுக்கு மின்வாரியம் பரிந்துரை


மலைக்கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம்:கடம்பூர், ஆசனூரில் 2 புதிய துணை மின்நிலையங்கள்தமிழக அரசுக்கு மின்வாரியம் பரிந்துரை
x

மலைக்கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய கடம்பூர், ஆசனூரில் 2 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஈரோடு மின்வாரியம் பரிந்துரை செய்து உள்ளது.

ஈரோடு

மலைக்கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய கடம்பூர், ஆசனூரில் 2 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஈரோடு மின்வாரியம் பரிந்துரை செய்து உள்ளது.

மின் வினியோகம்

தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் செய்வதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கும் மின் வினியோகம் செய்வதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மலைகளின் வழியாக மின்கம்பங்கள், கம்பிகள் பொருத்தப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

புதிய துணை மின்நிலையங்கள்

இந்தநிலையில் மலைக்கிராமங்களில் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்வதற்காக கடம்பூர், ஆசனூரில் 2 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசுக்கு ஈரோடு மின்வாரியம் பரிந்துரை செய்து உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் இந்திராணி கூறியதாவது:-

பெரும்பாலான மலைக்கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில மலைக்கிராமங்களில் மின் பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே அந்த பகுதிகளிலும் சோலார் மூலமாக மின்விளக்குகள் இயங்குவதற்கு முடிந்த வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது மலைக்கிராமங்களில் குறைந்த மின் அழுத்த பிரச்சினை ஆங்காங்கே ஏற்படுவதாக புகார் வந்தது. எனவே கடம்பூர் மற்றும் ஆசனூர் ஆகிய 2 இடங்களில் புதிதாக 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அரசின் ஒப்புதல் வந்தபோது பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story