ஒன்றியக்குழு கூட்டம்


ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:30 AM IST (Updated: 23 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறையில் கடமலை-மயிலை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

தேனி

கடமலை- மயிலை ஒன்றியக்குழு கூட்டம் மயிலாடும்பாறையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சித்ரா சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு- செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டது. பின்னர் கிராமங்களில் வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story