இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம்
x

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கீழையூர் சமுதாயக்கூடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு தீர்மானம் குறித்து பேசினார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு விவசாய தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை தூர்வார வேண்டும். பல்வேறு இடங்களில் எதிர்பாராமல் மின்வெட்டு ஏற்படும் நிலையில், ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் 300 மி.லி. மண்எண்ணெய்யை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில்மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பாலாஜி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் சிவதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story