சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம்
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது
சீர்காழி;'
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் இளங்கோவன், துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுலோச்சனா வரவேற்று பேசினார். கூட்டத்தில், தமிழக அரசு ஆணைக்கிணங்க ஒன்றியக்குழு தலைவருக்கு வாகனம் வாங்குவதற்கான சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றியக்குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, மேலாளர் செல்ல முத்துக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.