மதுரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மத்திய மந்திரி
மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தை அருகில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர், அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
மதுரை பழங்காநத்தம் உழவர் சந்தை அருகில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர், அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்தியஅரசு நாடு முழுவதும் ``ஸ்வச் பாரத்'' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி வழியில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். சுதந்திரத்துக்கு முன்பு நாடு முழுவதும் பெரிய அளவில் சுகாதாரமின்மை நிலவியது. பிரதமர் மோடி ``ஸ்வச் பாரத்'' திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் சுத்தம், சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்தம்-சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தாமாகவே முன்வந்து ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் ராஜரத்தினம், கார்த்திக் பிரபு, ஜெயவேல், பாரி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய மந்திரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.