பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம்
பல்கலை. துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென கவர்னர் நிபந்தனை விதித்ததால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்றும் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலை., கல்வியியல் பல்கலை., சென்னை பல்கலைகழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
Related Tags :
Next Story